2014-07-22 16:51:46

ஜெர்மனியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது


ஜூலை,22,2014. ஜெர்மன் நாட்டில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஜெர்மனியில் கடந்த ஆண்டு 2 கோடியே 42 இலட்சம் கத்தோலிக்கர்கள் வாழ்ந்ததாகவும் இது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 29.9 விழுக்காடு எனவும் கூறும் இந்த ஆய்வறிக்கை, 2012ம் ஆண்டில் ஜெர்மனியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 30.3 விழுக்காடாக இருந்தது எனவும் தெரிவிக்கிறது.
ஜெர்மனியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து தன் கவலையை வெளியிட்ட ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Reinhard Marx, இந்தக் கவலை தரும் முடிவுகள், திருஅவையின் மீது மக்களின் நம்பிக்கை குறைந்துவருவதன் வெளிப்பாடாக நோக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்தார்.
ஞாயிறு கோவிலுக்குச் செல்வோர் மற்றும் திருமுழுக்குகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளபோதிலும், கோவில்களில் அடக்கச் சடங்குகள் நிறைவேற்றுவது அதிகரித்து வருவதாகவும் இவ்வாய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.