2014-07-22 16:49:06

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக பங்களாதேசில் கண்டன ஊர்வலம்


ஜூலை,22,2014. பங்களாதேசின் Boldipukur நகரில் கத்தோலிக்கக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு நீதி கேட்டு ஏறத்தாழ 2,500 கத்தோலிக்கர்கள் அப்பகுதி மாவட்ட அலுவலகம்முன் கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.
Dinajpur மறைமாவட்ட ஆயர் Sebastian Tuduடன் 100 அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகளும் கலந்துகொண்ட இந்த ஊர்வலம், நீதியான விசாரணைக்கும் குற்றவாளிகளின் தண்டனைக்கும் அழைப்புவிடுத்தது.
இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஆயர் Tudu உரைக்கையில், அருள்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும், இத்தகைய தாக்குதல்களால் மக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன என்பது உணரப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, தலைநகர் டாக்காவிலும் ஏறத்தாழ 600 கத்தோலிக்கர்கள் கூடி, Boldipukur கோவில் தாக்கப்பட்டதற்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்றை நடத்தினர்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.