2014-07-19 15:12:45

இயேசு சபை வானயியல் அறிவியலாளருக்கு Carl Sagan விருது


ஜூலை,19,2014. மதமும் அறிவியலும் எவ்வாறு ஒன்றிணைந்து செல்கின்றன என்பதை மிகத் திறமையுடன் வெளிப்படுத்தி வருவதைப் பாராட்டும் விதமாக, இயேசு சபை அருள்சகோதரர் Guy Consolmagno அவர்களுக்கு, மதிப்புமிக்க Carl Sagan விருது வழங்கப்பட்டுள்ளது.
அருள்சகோதரர் Consolmagno அவர்கள், வான்கோள்களுக்குரிய அறிவியலைப் பயன்படுத்தி மதமும் அறிவியலும் எவ்வாறு ஒன்றிணைந்து செல்கின்றன என்பதை வெளிப்படுத்தி வருகிறார் என, இவ்விருதை வழங்கிய அமெரிக்க வானயியல் கழகத்தின்(AAS) அறிவியல் பிரிவு கூறியுள்ளது.
இவ்விருது பற்றிப் பேசிய அருள்சகோதரர் Consolmagno அவர்கள், திருஅவை அறிவியலுக்கு எதிரானது அல்ல என்பதை இவ்விருது உணர்த்துகின்றது என்றும், அறிவியலாளர்கள், அறிவியல்மீது தங்களுக்கிருக்கும் அன்பை குழுக்களில் பேசுவதற்குத் தயங்கக் கூடாது என்றும் கூறினார்.
ஹார்வர்டு கல்லூரி வானிலை ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய பின்னர் தனது முப்பதுகளில் இயேசு சபையில் சேர்ந்தார் அருள்சகோதரர் Consolmagno.

ஆதாரம் : Zenit







All the contents on this site are copyrighted ©.