2014-07-17 15:36:40

காமரூன் நாட்டிலும், பல்வேறு நாடுகளிலும் அமைதி நிலைக்க ஜூலை 19 மன்றாட்டு நாள்


ஜூலை,17,2014. காமரூன் நாட்டிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் அமைதி நிலைக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் ஜூலை 19, வருகிற சனிக்கிழமை மன்றாட்டு நாள் கடைபிடிக்கப்பட வேண்டுமென்று, ஆப்ரிக்க ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
காமரூன் ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Samuel Kleda அவர்கள் விடுத்துள்ள இந்த அழைப்பில், பக்கத்து நாடான நைஜீரியாவை அச்சுறுத்தி வரும் Boko Haram வன்முறை கும்பல் தங்கள் அழிவுப் பாதைகளை விட்டு திரும்பி வரவேண்டும் என்ற சிறப்பான வேண்டுதலை முன்வைத்துள்ளார்.
இந்த மன்றாட்டு நாளன்று, Douala உயர் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உலக அமைதியை மையப்படுத்தி சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேராயர் Kleda அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
பேராயரின் இந்த அழைப்பைத் தொடர்ந்து, காமரூன் நாட்டின் பல பகுதிகளில் மன்றாட்டு ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும், இவை அனைத்தும், சனிக்கிழமை மாலையில் திருப்பலியுடன் நிறைவுறும் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Fides








All the contents on this site are copyrighted ©.