2014-07-16 15:54:13

ஆரவாரத்துடன் அரங்கேறிய முதலாம் உலகப்போர் நினைவு விழா


ஜூலை,16,2014. பிரான்சில் முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. 1914ம் ஆண்டில் தொடங்கிய முதல் உலகப் போரில் 76 நாடுகள் பங்கேற்று மோதிக் கொண்டது வரலாற்றில் இடம்பிடித்த ஒரு முக்கிய விடயமாகும்.
முதல் உலகப் போரில் பிரான்சும் பங்கேற்று பல நாடுகளுக்கு எதிராக போர் தொடுத்ததுடன், தனது ஆட்சியையும் நிலை நாட்டி வந்துள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில் தலைநகர் பாரிசில், பிரான்ஸ் அரசுத்தலைவர் François Hollande அவர்கள் முன்னிலையில் 3700 இராணுவ வீரர்கள் அணிவகுப்பு நிகழ்த்தியுள்ளனர். மேலும் 50 இராணுவ விமானங்கள் வானிலும், 240 இராணு வாகனங்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.
இதுகுறித்து அரசுத்தலைவர் François Hollande கூறுகையில், இந்த பிரம்மாண்ட அணி வகுப்பை, உலகப்போரில் மடிந்த ஒரு கோடிக்கும் அதிகமான பிரெஞ்சு இராணுவ வீரர்களுக்கு நன்றி உணர்வுடன் சமர்ப்பிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட பன்னாட்டு இளையோர், தாங்கள் ஏந்தி வந்திருந்த புறாக்களை, சமாதானத்தின் அடையாளமாக வானில் பறக்கவிட்டது, அணிவகுப்பின் உச்சக்கட்டமாக அமைந்தது.

ஆதாரம் : Mashable








All the contents on this site are copyrighted ©.