2014-07-15 15:52:43

புதிதாக கோவில்கள் கட்டப்படுவதற்கு. சூடான் அரசு தடை


ஜூலை,15,2014. சூடான் நாட்டில் புதிதாக கோவில்கள் கட்டப்படுவதற்கு வழங்கப்பட்ட அனுமதிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டின் சமய விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சூடான் நாட்டிலிருந்து தென் சூடான் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, சூடானில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், புதியக் கோவில்கள் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதிகள் மறுக்கப்படுவதாக அமைச்சர் Shalil Abdullah தெரிவித்தார்.
இதற்கிடையே, சூடானில் வாழும் கிறிஸ்தவர்கள், தொடர்ந்து இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார், தென் சூடான் நாட்டு ஆயர் Eduardo Hiiboro Kussala.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.