2014-07-12 15:19:22

ஹாங்காங்கில் மத சுதந்திரமும், குடியுரிமைகளும் ஒன்றிணைந்து செல்லவேண்டியவை, கர்தினால் சென்


ஜூலை,12,2014. ஹாங்காங்கில் மத சுதந்திரமும், குடியுரிமைகளும் ஒன்றிணைந்து செல்லவேண்டியவை என்று கருத்து தெரிவித்தார் ஹாங்காங்கின் முன்னாள் ஆயர் கர்தினால் ஜோசப் சென்.
82 வயதாகும் கர்தினால் சென் அவர்கள் ஆசிய செய்தி நிறுவனத்துக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், ஹாங்காங்கின் சனநாயகத்துக்காக மேற்கொண்ட 80 கிலோ மீட்டர் நடைப்பயணம், சீன அரசுக்கு விசுவாசமான கத்தோலிக்கத் திருச்ச்பையில் சேர மறுத்ததால் இரு ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆயர் ததேயுசின் உறுதியான வாழ்வு, சீனாவின் மத சுதந்திரம் என பல தலைப்புக்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மத சுதந்திரம், குடியுரிமை சுதந்திரத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது எனவும், ஆயர் ததேயுஸ் தனது உயிர் பற்றி கவலைப்படாமல் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கிறார் எனவும் தெரிவித்தார் கர்தினால் சென்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சீனாவுக்கு வருகை தருமாறு பெய்ஜிங் அரசு அழைத்தால்கூட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் ஏமாற்றப்பட்டுவிடாதபடிக்கு கவனமாக இருக்க வேண்டுமெனவும் கருத்து தெரிவித்தார் கர்தினால் சென்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.