2014-07-12 15:19:36

பத்திரிகை கருத்தரங்குகள் நடத்துவதுற்கு எதிரான இலங்கை அரசின் அறிவிப்புக்கு கண்டனம்


ஜூலை,12,2014. இலங்கையில் பத்திரிகை கருத்தரங்குகள், பயிற்சிப்பாசறைகள், பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சிகள் ஆகியவற்றை அரசு-சாரா அமைப்புகள் நடத்துவதுற்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தடைவிதித்திருப்பதற்கு, அந்நாட்டு சமூக ஆர்வலர் அமைப்புகளும் மனித உரிமை குழுக்களும் தங்களின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
பத்திரிகை சுதந்திரத்தைத் தடை செய்ய முயற்சிக்கும் இந்தத் தடை அறிக்கையை கடந்த திங்களன்று வெளியிட்டது இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வெள்ளியன்று தலைநகரில் நடந்த கூட்டத்தில் பேசிய லக்சிரி பெரைரா, இந்த அறிக்கை, 1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பை மீறுவதாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், இலங்கையில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக, இலங்கை அரசிடம் மனித உரிமைகள் ஆணையம் கடந்த வியாழக்கிழமையன்று அளித்த அறிக்கையில், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மரணதண்டனைக் கைதிகள் 529 பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 30 வயதில் இருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.







All the contents on this site are copyrighted ©.