2014-07-11 16:12:17

பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தவரைக் காப்பாற்றுவதற்கு தேசிய குழு


ஜூலை,11,2014. பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதவர்களை வன்முறைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கும், பல மதத்தவரிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்குமென தேசிய குழு ஒன்று அமைக்கப்படுவதற்கு அந்நாட்டு அரசும், எதிர்க்கட்சியும் இசைவு தெரிவித்துள்ளன.
பத்துப் பேர் கொண்ட இக்குழுவில் 4 முஸ்லிம்கள், இரண்டு கிறிஸ்தவர்கள், இரண்டு இந்துக்கள், ஒரு பார்சி மதத்தவர், ஒரு சீக்கியர் ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவர்.
பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்வதற்கு அரசும், நாட்டின் முக்கிய நிறுவனங்களும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கடந்த ஜூன் 7ம் தேதி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி Tassaduq Hussain Jillani அவர்கள் வழங்கிய 32 பக்கத் தீர்ப்பில், சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் பாதுக்காக்கப்படும் என ஏட்டளவில் இருந்தால் மட்டும் போதாது, அவை செயலளவில் காட்டப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.