2014-07-11 16:12:30

உலகின் பாதிக்கு மேற்பட்ட மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர், ஐ.நா.


ஜூலை,11,2014. 2050ம் ஆண்டுக்குள் மேலும் 250 கோடிப் பேர் நகரங்களில் வாழ்வார்கள் எனவும், உலகின் மக்களில் ஏறக்குறைய பாதிப்பேர் தற்போது சிறிய நகரங்களில் வாழ்கின்றனர் எனவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.
உலக நகர்ப்புறக் கூறுகள் என்ற தலைப்பில், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது உலகின் 54 விழுக்காட்டு மக்கள் நகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர் எனவும், இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டுக்குள் 66 விழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகில் தற்போது நகரங்களில் வாழும் மக்களை அதிகமாகக் கொண்டுள்ள இந்தியாவில் 2050ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 37 விழுக்காடு அதிகரிக்கும் என்றும், உலகில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில், டில்லி 2வது இடத்தில் உள்ளது என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவிலும் நைஜீரியாவிலும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர் என்றும் ஐ.நா. அறிக்கை கூறியுள்ளது.
ஜூலை 11, இவ்வெள்ளி அனைத்துலக மக்கள்தொகை தினமாகும்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.