2014-07-10 15:19:35

நேர்காணல் – கடல்சார் ஞாயிறு


ஜூலை,10,2014. அன்பர்களே, நாம் வாங்கும் பொருள்களில் 90 விழுக்காடு கடல் சார்ந்து உள்ளது. உலகின் ஏறத்தாழ 15 இலட்சம் கடல்சார் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வு தினமும் கடினமான சூழல்களில் செலவழிகின்றது. தங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பல நாள்கள் பிரிந்து கடலில் பயணம் செய்யும் இத்தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட திருஅவை, கடந்த 90 ஆண்டுகளாக அவர்களுக்கு மேய்ப்புப்பணி உதவிகளைச் செய்து வருகிறது. ஆண்டுதோறும் கடல்சார் ஞாயிறு என கடைப்பிடித்து அந்நாளில் இந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகச் செபிக்குமாறும் கேட்கிறது திருஅவை. இவ்வாண்டு கடல்சார் ஞாயிறு, ஜூலை 13, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மறைமாநில சமூக ஆர்வலர் எக்ஸ் டி செல்வராஜ் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து கடல்சார் ஞாயிறின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டோம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.