2014-07-08 16:06:30

பயங்கரவாதிகள் பிடியிலிருந்து 63 நைஜீரிய பெண்கள் தப்பினர்


ஜூலை,08,2014. மேற்கு ஆப்ரிக்க நாடாகிய நைஜீரியாவில், 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளால், கடந்த மாதம் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர் 63 பேர், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளனர்.
தாம்போவா என்ற இடத்திலிருந்து, கடந்த மாதம் 22ம் தேதியன்று கடத்திச் செல்லப்பட்ட இந்தப் பெண்கள், இராணுவத்தினருடன் பயங்கரவாதிகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது தப்பித்து வந்து விட்டனர்.
எனினும், மே 15ம் தேதியன்று சிபோக் நகரில், கிறிஸ்தவ மாணவியர் விடுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 219 பள்ளிச் சிறுமியர் கதி தெரியவில்லை; அவர்கள் இன்னும் பயங்கரவாதிகள் பிடியில்தான் உள்ளதாக கருதப்படுகிறது.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.