2014-07-07 16:20:20

சிறுபான்மையின மதத்தவர் பாகிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறுவது அதிகரித்துள்ளது


ஜூலை,07,2014. பாகிஸ்தான் நாட்டில் பயங்கரவாதமும் தீவிரவாதமும் அதிகரித்துவருவதால், மதச் சிறுபானமையினர் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதும் அதிகரித்துள்ளதாக அரசு-சாரா அமைப்பு ஒன்றின் இயக்குனர் Farrukh H. Saif தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானின் 14 ஆயிரம் கிறிஸ்தவர்கள் ஆசியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அடைக்கலம் தேடியுள்ளதாக தெரிவித்த Farrukh H. Saif, பாகிஸ்தானின் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கும் தேவநிந்தனைச்சட்டம் மூலமான தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதைத்தொடர்ந்து 2009ம் ஆண்டிலிருந்தே கிறிஸ்தவர்கள் அகதிகளாக நாட்டிலிருந்து வெளியேறுவது துவங்கியுள்ளது எனவும் கூறினார் அவர். சிறுபான்மை மதத்தவர் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடை செய்வதற்கு முதலில் பாகிஸ்தான் அரசு வன்முறைகளைத் தடைசெய்வதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் எடுத்துரைத்தார், "World Vision in Progress" என்ற அரசு சாரா அமைப்பின் இயக்குனர் Farrukh H. Saif.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.