2014-07-04 16:03:36

மனிதர் கொலைசெய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், எருசலேம் முதுபெரும் தந்தை


ஜூலை,04,2014. அரசியல் மற்றும் சமயத் தலைவர்கள், பழிவாங்கும் எண்ணத்துக்கு ஆதரவளித்து அதற்கு உரமூட்டி ஊக்கமளிப்பது சரியான செயல் அல்ல என்று கூறியுள்ளார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal .
ஓர் இளம் பாலஸ்தீனியர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டது குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்த முதுபெரும் தந்தை Twal அவர்கள், பழிக்குப்பழி செயல்படுதல் மேலும் பழிவாங்குதலுக்கும், இரத்தம் சிந்த வைப்பது மேலும் இரத்தம் சிந்தலுக்கும் இட்டுச்செல்லும் என்றும் கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட அனைவரும் அப்பாவி சிறார் என்றும், அவர்கள் வெறுப்பு என்ற பேய்த்தனமான பீடங்களில் பலியிடப்பட்டவர்கள் என்றும் உரைத்த முதுபெரும் தந்தை Twal அவர்கள், கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட அனைத்து இளையோரின் குடும்பங்களுக்காகச் செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடத்தப்பட்டதாக குடும்பத்தினரால் புகார் செய்யப்பட்டிருந்த Mohammed Abu Khdeir என்ற 16 வயது பாலஸ்தீனியரின் உடல் எருசலேம் நகருக்கு மேற்கேயுள்ள காடு ஒன்றில் இவ்வியாழனன்று கண்டெடுக்கப்பட்டது. இவர் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் அவர் உடம்பில் காணப்பட்டன என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
மூன்று இஸ்ரேல் வளர் இளம் பருவத்தினர், கடந்த ஜூன் 12ம் தேதி கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதற்குப் பதிலடியாக 16 வயது பாலஸ்தீனியர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.