2014-07-04 16:03:42

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு இந்தோனேசிய ஆயர்கள் முயற்சி


ஜூலை,04,2014. போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு முயற்சிக்கும் மக்களுக்கு உதவுவதற்கென இந்தோனேசிய ஆயர்கள் மூன்று விதங்களில் ஒத்துழைப்பை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
இந்தோனேசிய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் Johannes Pujasumarta அவர்கள், அந்நாட்டு அரசின் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், Kunci கத்தோலிக்க மறுவாழ்வு மையம் ஆகியவற்றுடன் இணைந்து, போதைப்பொருளுக்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவருவதற்கு உதவி தேடுவோருக்கு உதவி செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
மேலும், இந்தோனேசிய ஆயர்கள் வெளியிட்டுள்ள மேயப்புப்பணி அறிக்கையில், நாட்டின் அனைத்துக் கத்தோலிக்க நிறுவனங்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அடுத்த ஆண்டுக்குள் 52 இலட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகமான முஸ்லிம்களைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் கத்தோலிக்கர் 3 விழுக்காடாகும்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.