2014-07-01 16:02:16

மதுபானத்தால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆண்டுக்கு 88,000 உயிரிழப்பு


ஜீலை,01,2014. மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவதால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 88,000 பேர் உயிரிழப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்லும் வயதுடைய இளையோரின் இறப்புக்களுள் பத்தில் ஒன்றிற்கு மதுபானம் காரணமாக இருப்பதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
அதிக அளவில் மதுபானங்களை அருந்துவதால் ஒருவரின் வாழ்வு 30 ஆண்டுகள் வரை இழக்கப்படுவதாக அண்மையில் அந்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றும் தெரிவிக்கிறது.
மதுபானம் அருந்துபவர்களின் இளவயது மரணங்களுக்கு, தற்கொலை, தண்ணீரில் மூழ்கி இறத்தல், மனச்சோர்வு நோய், விழுந்து காயமடைதல் போன்றவை தவிர வேறு பலவும் உள்ளன எனவும் இவ்வாய்வு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.