2014-06-28 16:43:39

வட ஈராக்கிலிருந்து பத்தாயிரம் கிறிஸ்தவர்கள் வெளியேறியுள்ளனர், ஐ.நா.


ஜூன்,28,2014. ஈராக்கின் மொசூல் நகரில் தொடர்ந்து நடந்துவரும் வன்முறைகளால், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் வட ஈராக்கிலிருந்து பத்தாயிரம் மக்கள்வரை தங்கள் வீடுகளைவிட்டு இவ்வாரத்தில் வெளியேறியுள்ளனர் என, UNHCR ஐ.நா. அகதிகள் நிறுவன இயக்குனர் கூறியுள்ளார்.
இம்மக்களில் பலர், ஈராக்கில் குர்த் இனத்தவர் வாழும் பகுதிக்குச் சென்றுள்ளனர் எனவும், இப்பகுதியில் ஏற்கனவே 3 இலட்சம் பேர் பிற இடங்களிலிருந்து தஞ்சம் தேடியுள்ளனர் எனவும் UNHCR பேச்சாளர் Melissa Fleming ஜெனீவாவில் அறிவித்தார்.
இரு வாரங்களுக்கு முன்னர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள Qaraqosh நகரம், மொசூல் நகருக்கு தென்கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. Hamdaniya எனவும் அழைக்கப்படும் இந்நகரத்தில் ஐம்பதாயிரம் பேர் வாழ்ந்து வந்தனர்.
பயங்கரவாதிகள் நடத்திவரும் தாக்குதலால் ஈராக்கில் ஏறக்குறைய இருபது இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக ஈராக்கிற்கான ஐ.நா. இயக்குனர் பியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.