2014-06-25 16:47:13

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறும் சிறாரும் இளையோரும் மோதல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வருகின்றனர், அமெரிக்க ஆயர்


ஜூன்,25,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறும் சிறாரும் இளையோரும் ஏதோ ஆர்வக்கோளாறால் அந்நாட்டுக்கு வருவதில்லை, மாறாக, மோதல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வருகின்றனர் என, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் தெரிவித்தார்.
வாஷிங்டனிலுள்ள பிரதிநிதித்துவ அவையின் நீதித்துறை குழுவிடம் இச்சிறார் குறித்த விபரங்களை ஒலி-ஒளி படக் காட்சி மூலம் இப்புதனன்று விவரித்த El Paso(Texas) ஆயர் Mark Joseph Seitz அவர்கள் இவ்வாறு கூறினார்.
அமெரிக்க ஆயர்கள் சார்பில் இம்முயற்சியில் இறங்கிய ஆயர் Seitz அவர்கள், இப்படக் காட்சியைப் பார்த்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையான மனித முகங்களைக் கண்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
மெக்சிகோ, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் பகுதியில் குடியேறும் சிறார் மற்றும் இளையோர் குறித்த விபரங்களைச் சேகரித்துள்ளார் ஆயர் Seitz.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.