2014-06-24 15:52:25

உயிர்வாழ உடற்பயிற்சி அவசியம்: கானடா நாட்டு ஆய்வாளர் தகவல்


ஜூன்,24,2014. ஒழுங்கான உடற்பயிற்சி, நோய் வருவதை தடுக்கும் என கனடாவில் நடந்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள Brain Institute ஹமில்ரன் மற்றும் McMaster என்ற பல்கலைக்கழகம் இணைந்து உடற்பயிற்சி குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.
உடற்பயிற்சியானது உடலையும் மனதையும் செயலிழக்காமல் வைத்திருக்க உதவி புரிகின்றது. ஒழுங்கான முறையில் உடற்பயிற்சி செய்பவர்கள் தமது முதிர்ச்சியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடிகின்றது என, இந்த ஆய்வை நடத்திய துணை பேராசியர் ஜெனிபர் என்ற கூறினார்.
நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தால் நம்மை நாம் காத்து கொள்ளலாம்.

ஆதாரம் : தமிழ்வின்







All the contents on this site are copyrighted ©.