மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவ சமூகங்களுக்காகச் செபிப்போம், டுவிட்டரில் திருத்தந்தை
ஜூன்,23,2014. கிறிஸ்தவம் பிறந்த மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து
வாழும்பொருட்டு அப்பகுதிவாழ் கிறிஸ்தவ சமூகங்களுக்காகச் செபிப்போம் என, இத்திங்களன்று
தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இதற்கிடையே,
இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள Golan Heights பகுதியில் சிரியாவின் தாக்குதலில் இஸ்ரேல்
இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இத்திங்கள் காலையில் இஸ்ரேல் போர் விமானங்கள்
சிரியாவுக்குள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன என ஓர் ஊடகச் செய்தி கூறுகின்றது. சிரியா
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒன்பது இடங்களில் இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதல்களை
நடத்தியதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், வருகிற ஜூலை 5ம் தேதி சனிக்கிழமையன்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் இத்தாலியின் மொலிசே சென்று, தொழிலாளர்கள், நோயாளிகள்
மற்றும் ஏழைகளைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.