2014-06-21 15:27:30

கலாபிரியா மாநிலத்தில் திருத்தந்தையின் திருப்பயண நிகழ்ச்சிகள்


ஜூன்,21,2014. இச்சனிக்கிழமையன்று கலாபிரியா மாநிலத்தின் Castrovillari மாவட்டச் சிறைக்குச் சென்று கைதிகளுக்கு உரையாற்றிய பின்னர், Cassano all'Jonio நகருக்கு ஹெலிகாப்டரில் அந்நகர் “San Giuseppe Moscati” முதியோர் இல்லம் சென்று உரை நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதன் பின்னர் Cassano all’Jonio நகர் பேராலயம் சென்று மறைமாவட்ட குருக்கள் மற்றும் துறவிகளைச் சந்தித்து உரையாற்றினார்.
இச்சனிக்கிழமை மதிய உணவை ஏழைகள் மற்றும் “Saman” போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலுள்ள இளையோரோடு அருந்தினார். ஓய்வுபெற்றோர் வாழும் “Casa Serena” என்ற இல்லத்துக்குச் சென்ற பின்னர் மாலையில் திறந்த வெளியில் திருப்பலியும் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியில் மாஃபியா குற்றக்கும்பலின் மையமாக கருதப்படும் கலாபிரியா மாநிலத்தில் 12 மணிநேரத் திருப்பயணத்தை முடித்து வத்திக்கான் திரும்புவது அவரது பயணத்திட்டத்தில் உள்ளது.
“மன்னிப்புக் கேட்பதற்காக வருகிறேன்”என்ற தலைப்பில் இத்திருப்பயணம் நடைபெற்றது. Cassano allo Ionio நகர் ஏழைகள் அதிகம் வாழ்கின்ற நகரமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.