2014-06-20 16:16:03

இத்தாலிய மாஃபியாவின் மையப் பகுதியைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,20,2014. ஜூன் 21, இச்சனிக்கிழமையன்று, தென் இத்தாலியின் கலாபிரியா மாநிலத்துக்கு ஒரு நாள் திருப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் திருத்தந்தை.
இத்தாலியில் மாஃபியா குற்றக்கும்பலின் மையமாக கருதப்படும் இம்மாநிலத்தின் Cassano allo Ionio நகருக்குச் செல்லும் திருத்தந்தை, அங்குள்ள சிறை, மருத்துவமனை போன்ற இடங்களைப் பார்வையிட்ட பின்னர் ஏழைகளோடு மதிய உணவு அருந்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“மன்னிப்புக் கேட்பதற்காக வருகிறேன்” என்ற தலைப்பில் நடக்கும் இந்த ஒரு நாள் திருப்பயணத்தில், கலாபிரியா மாநில மக்களுக்குத் திருப்பலியும் நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Cassano allo Ionio நகர் ஏழைகள் அதிகம் வாழ்கின்ற நகரமாகும்.
மேலும், துன்பங்களின் முன்பாக அதிகமான மெத்தனப்போக்கு இருக்கின்றது. இந்த மெத்தனப் போக்கைளை தெளிவான பிறரன்புச் செயல்களால் மேற்கொள்வோம், என இவ்வெள்ளியன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.