2014-06-19 15:47:20

மதப் பாரம்பரியங்களை மதிக்காத அனைத்து போக்குகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் - கத்தோலிக்கர்களும், Shia இஸ்லாமியர்களும் வெளியிட்ட அறிக்கை


ஜூன்,19,2014. மதத் தலைவர்கள் என்ற முறையில், மதப் பாரம்பரியங்களை மதிக்காத அனைத்து போக்குகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கத்தோலிக்கர்களும், Shia இஸ்லாமியர்களும் இணைந்து அறிக்கையொன்றை அண்மையில் வெளியிட்டனர்.
மத நல்லுணர்வை வளர்க்கும் நோக்குடன், அமெரிக்க ஆயர் பேரவையின் சார்பில், ஈரான் நாட்டில் பயணம் ஒன்றை மேற்கொண்ட கத்தோலிக்கக் குழுவினரும், ஈரான் நாட்டின் Shia இஸ்லாமியத் தலைமைப் போதகர்களும் இணைந்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் Iowa மாநிலத்தின், Des Moines ஆயர் Richard Pates அவர்கள் தலைமையில் பயணம் மேற்கொண்ட கத்தோலிக்கக் குழுவினரும் இஸ்லாமியரும் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், அரசுகள், நாட்டின் எல்லைகள் அனைத்தையும் கடந்து, மத நல்லுணர்வை உலகெங்கும் வளர்ப்பது நமது கடமை என்று கூறப்பட்டுள்ளது.
ஆயுதங்களை உற்பத்தி செய்வதும், அவற்றை சேகரிப்பதும் Shia இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், மக்களை அழிக்கும் அனைத்து ஆயுதங்களையும் இவ்வுலகிலிருந்து ஒழிப்பது கத்தோலிக்கர்களின் கொள்கை என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.