2014-06-18 16:14:59

தங்கள் சக்தியை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக, புரட்சிக் குழுக்கள் அலெப்போ நகருக்கு வரும் நீர் இணைப்புக்களைத் தடுத்துள்ளனர்


ஜூன்,18,2014. அலெப்போ நகரில், கோவில்களிலும், மசூதிகளிலும் உள்ள கிணற்று நீரை மக்கள் பயன்படுத்துவதற்காக மீண்டும் திறந்து வைத்துள்ளோம். இந்த நீர் மிகப் பாதுகாப்பான நீர் அல்லவென்றாலும் அதை மக்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று ஆர்மீனிய கத்தோலிக்க பேராயர் Boutros Marayati அவர்கள் கூறியுள்ளார்.
தங்கள் சக்தியை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக, புரட்சிக் குழுக்கள் அலெப்போ நகருக்கு வரும் நீர் இணைப்புக்களைத் தடுத்துள்ளனர் என்று Fides கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
அலெப்போ நகரின் பல வீடுகளும், பள்ளிகளும் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளன என்று கூறும் பேராயர் Marayati அவர்கள், மக்கள் பயன்படுத்தும் இந்த நீரின் வழியே மேலும் பல தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தும் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, கோவில்களிலும், மசூதிகளும் தஞ்சம் அடைந்துள்ள மக்கள், தங்கள் ஒவ்வொரு நாள் வாழ்வுக்கும் பாதுகாப்பின்றி உள்ளனர் என்று பேராயர் Marayati அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.