2014-06-14 16:05:31

நவீன அடிமைத்தனமுறையை ஒழிக்கும் புதிய அனைத்துலக உடன்பாட்டுக்கு ஐ.நா. மனித உரிமைகள் வல்லுனர்கள் வரவேற்பு


ஜூன்,14,2014. உலகில் நவீன அடிமைத்தனமுறையை ஒழிக்கும் நோக்கத்தில் இவ்வாரத்தில் கொண்டுவரப்பட்டுள்ள, கட்டாயமாகத் தொழில் குறித்த புதிய அனைத்துலக உடன்பாட்டை வரவேற்றுளளனர் ஐ.நா. மனித உரிமைகள் வல்லுனர்கள்.
அடிமைத்தனம், குடியேற்றதாரர், மனித வர்த்தகம், பாலியல் தொழிலுக்காக சிறார் விற்கப்படுவதும் பயன்படுத்தப்படுவதும், நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்தவர்கள் போன்ற விவகாரங்களில் வல்லுனர்கள், ஐ.நா.வின் இந்த உடன்பாட்டை வரவேற்றுளளனர்.
உலகில் 2 கோடியே 10 இலட்சம் பேர் கட்டாயமாகத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நவீன அடிமைத்தனமுறைகளின் மூலம் தனியார் அமைப்புகள் ஒவ்வோர் ஆண்டும் சட்டத்துக்குப் புறம்பே 15,000 கோடி டாலர் பணம் ஈட்டுகின்றனர்.
ஐ.நா.வின் அனைத்துலக தொழில் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த அனைத்துலக உடன்பாடு, 1930ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட, கட்டாயமாகத் தொழில் குறித்த விதிமுறைக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.