2014-06-14 16:05:14

Knights of Columbus அமைப்புக்கு 2013ம் ஆண்டில் நன்கொடைகள் அதிகரிப்பு


ஜூன்,14,2014. உலகில் பல்வேறு இடர்துடைப்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுவரும் Knights of Columbus என்ற கத்தோலிக்க சகோதரத்துவ அமைப்புக்கு 2013ம் ஆண்டில் நன்கொடைகளும், தன்னார்வப்பணி நேரங்களும் அதிகரித்து சாதனை படைத்துள்ளன என, CNA கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியது.
மனிதாபிமானப் பணிகளுக்கென கிடைத்த நன்கொடைகளும், தன்னார்வப்பணி செய்ய முன்வந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன என, Knights of Columbus அமைப்பின் தலைவர் Carl A. Anderson தெரிவித்தார்.
Knights of Columbus அமைப்பின் உறுப்பினர்கள் 7 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மணி நேரங்களைத் தன்னார்வப்பணிக்கென செலவிட்டுள்ளனர் எனவும், இந்த அமைப்பு 17 கோடிக்கு மேற்பட்ட டாலரை நன்கொடையாகப் பெற்றுள்ளது எனவும் கூறினார் Anderson.
Knights of Columbus சகோதரத்துவ அமைப்பு கடந்த 132 ஆண்டுகளாக உலகில் பல பிறரன்புப் பணிகளைச் செய்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய 150 கோடி டாலரை பிறரன்புப் பணிகளுக்கென வழங்கியுள்ளது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.