2014-06-10 15:41:06

ஹாங்காங்கில் மக்களாட்சி மலர 84 மணி நேரப் நடைப் பயணம்,, கர்தினால் சென்


ஜூன்,10,2014. ஹாங்காங்கில் முழு மக்களாட்சிக்கு அழைப்புவிடுக்கும் அதிகாரப்பூர்வமற்ற கருத்து வாக்கெடுப்பில் பங்குகொள்வதற்கு குடிமக்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அப்பகுதியில் 84 மணி நேரம் நடைப்பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் ஹாங்காங் கர்தினால் ஜோசப் சென்.
ஒரு நாளைக்கு 20 கிலோ மீட்டர் வீதம் தினமும் ஏறக்குறைய 12 மணி நேரம் நடக்கத் திட்டமிட்டுள்ளார் 82 வயதாகும் கர்தினால் சென்.
இம்மாதம் 20 முதல் 22ம் தேதி வரை நடக்கவிருக்கும் பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பின் மூலம், ஹாங்காங்கில் உண்மையான மக்களாட்சியையும், 2017ம் ஆண்டில் முற்றிலும் சனநாயகமுறையில் தேர்தல் நடக்கவேண்டும் என்பதையும் மக்கள் விரும்புகின்றனர் என்பதை சீனாவுக்கு உணர்த்தவிருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஹாங்காங் நாடாளுமன்றத்துக்குப் பாதிப்பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஹாங்காங் ஆளுனர், சீன அரசால் உருவாக்கப்பட்ட குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.