2014-06-10 15:41:39

உலகப் பெருங்கடல்கள் குறித்த ஒப்பந்தத்தை அமல்படுத்துமாறு நாடுகளுக்கு வேண்டுகோள், ஐ.நா.


ஜூன்,10,2014. வெப்பநிலை மாற்றம் உலகுக்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருந்துவரும் இவ்வேளையில், உலகப் பெருங்கடல்கள் குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் நாடுகள் அக்கறை காட்டுமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
“உலகப் பெருங்கடல்கள் அரசியல் அமைப்பு” என்று அறியப்படும் இவ்வொப்பந்தம் அமலுக்கு வந்ததன் இருபதாம் ஆண்டு மற்றும் ஜூன் 8ம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலகப் பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு இவ்வாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பான் கி மூன்.
உலக மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினரின் வாழ்வாதாரங்கள் மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ளன என்றும், அடுத்த இருபது ஆண்டுகளில் மீன்வள புரோட்டின் சத்து இருமடங்கு அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.
உலகப் பெருங்கடல்கள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், 1994ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அமலுக்கு வந்தது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.