2014-06-04 14:59:59

எகிப்தின் புதிய அரசுத்தலைவர் சரியான நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், தலத்திருஅவைத் தலைவர்


ஜூன் 04,2014. எகிப்தின் அரசுத்தலைவராக Abdel Fattah al-Sisi அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று எகிப்தில் பணியாற்றும் கத்தோலிக்க ஆயர் Adel Zaky அவர்கள் கூறினார்.
கடந்த வியாழனன்று 93 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள al-Sisi அவர்கள் பற்றி, Aid to the Church in Need கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்கு அளித்த பேட்டியில் ஆயர் Zaky அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத்தலைவர் இசுலாமிய மத நம்பிக்கை அதிகம் கொண்டவர் எனினும், மதம் ஒருவருடைய தனிப்பட்ட தேர்வு என்ற தெளிவான எண்ணம் கொண்டவர் என்றும், நாட்டின் பொது நலனில் அக்கறை கொண்டவர் என்றும் ஆயர் Zaky அவர்கள் புதிய அரசுத்தலைவரைக் குறித்துப் பேசினார்.
இராணுவத் தலைவராக இருந்த Abdel Fattah al-Sisi அவர்களின் வழிநடத்துதல், கடந்த மூன்றாண்டுகளாகக் குழப்பத்தில் மூழ்கியிருந்த எகிப்து நாட்டிற்கு அதிகம் தேவைப்படுகின்றது என்றும் ஆயர் Zaky அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : ACN







All the contents on this site are copyrighted ©.