2014-05-31 18:29:47

இஸ்லாமியப் பெண், கல்லால் எறிந்து கொல்லப்பட்ட பயங்கர நிகழ்வு, பெரும் கண்டனத்திற்குரியது - லாகூர் முன்னாள் பேராயர் Saldhana


மே,31,2014. பாகிஸ்தான் லாகூரில் Farzana Bibi என்ற இஸ்லாமியப் பெண், கல்லால் எறிந்து கொல்லப்பட்ட பயங்கர நிகழ்வு, பெரும் கண்டனத்திற்குரியது என்று லாகூர் உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் Lawrence Saldhana அவர்கள் கூறினார்.
குடும்பத்தினரின் இசைவு இன்றி, தான் விரும்பிய Mohammad Iqbal என்ற இஸ்லாமியரை மணந்ததற்காக, Farzana Bibi என்ற பெண், மே 27ம் தேதி, லாகூர் நீதி மன்றத்திற்கு முன், பகல் நேரத்தில், அவரது தந்தையாலும், மற்ற உறவினர்களாலும் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார்.
இந்தக் கொடுமையைக் கண்டனம் செய்த பாகிஸ்தான் பிரதமர், இக்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யவும், இந்த நிகழ்வைத் தடுக்காமல் இருந்த காவல் துறையினர் மீது விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
மானத்தைக் காக்கும் கொலைகள் என்ற பெயரில், கடந்த ஆண்டு மட்டும் 900க்கும் அதிகமான பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிகாரப் பூர்வத் தகவல் என்றால், அரசின் கவனத்திற்கு வராமல் நடைபெறும் இத்தகையக் கொலைகள் இன்னும் பல நூறு அதிகம் என்று Fides செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.