2014-05-31 18:27:32

Cameroon நாட்டின் Bamenda உயர் மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் கர்தினால் Filoni


மே,31,2014. Cameroon நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது நற்செய்திப் பணிக்கென இந்த நாட்டைச் சார்ந்த பலர் முன்வந்திருப்பது அழகான ஓர் அடையாளம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Cameroon நாட்டின் Bamenda உயர் மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள அங்கு சென்ற நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்கள் இவ்வாறு கூறினார்.
இந்த நூற்றாண்டு விழாவையொட்டி, மே 29, வியாழனன்று, கர்தினால் Filoni அவர்கள், Bamenda உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 9 அருள் பணியாளர்களையும், 7 தியாக்கொன்களையும் திருநிலைப்படுத்தினார்.
நற்செய்தி எனும் கொடையை பெறும் எவரும், அதைத் தன் சொந்த உடைமையாகக் கருதாமல், மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு கொடையாக அதைக் கருதவேண்டும் என்று கர்தினால் Filoni அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.