2014-05-30 16:38:02

ஐரோப்பாவில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து, Belarus நாட்டில் நடத்தும் கருத்தரங்கு


மே,30,2014. ஐரோப்பாவில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து, ஜூன் 2ம் தேதி, திங்கள் முதல், 6ம் தேதி, வெள்ளி முடிய Belarus நாட்டின் Minsk நகரில் கருத்தரங்கு ஒன்றை நடத்துகின்றன.
"மதமும், கலாச்சார பன்முகமும்: ஐரோப்பாவின் கிறிஸ்தவ சபைகள் சந்திக்கும் சவால்கள்" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில், பன்முகம் கொண்ட ஐரோப்பிய சமூகத்தில், மதச் சுதந்திரம், மதங்களுக்கிடையே உரையாடல் ஆகிய தலைப்புக்களில் விவாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்த்தடாக்ஸ் சபையினர் ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், கர்தினால் Péter Erdő அவர்களின் தலைமையில், இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், போலந்து, ஜெர்மனி, பெலாருஸ் ஆகிய நாடுகளின் ஆயர்களில் பலர், கத்தோலிக்கத் திருஅவையின் சார்பில், கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.