2014-05-29 16:48:23

ஏழு ஆண்டுகளில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 11 கோடியே, 40 இலட்சம் கூடியுள்ளது


மே,29,2014. 2005ம் ஆண்டுக்கும், 2012ம் ஆண்டுக்கும் இடையே திருமுழுக்கு பெற்ற கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 11 கோடியே, 40 இலட்சம் கூடியுள்ளது. உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையில் இது, 10.2 விழுக்காடு கூடுதலாகும்.
ஒவ்வோர் ஆண்டும் வத்திக்கான் வெளியிடும் புள்ளிவிவரங்கள் அண்மையில் வெளியாயின. இந்தப் புள்ளிவிவரங்கள் மக்களின் எண்ணிக்கையைப் பொருத்தமட்டில் இரண்டு ஆடுகளுக்கு முன்னதான விவரங்கள் என்று வத்திக்கான் அறிக்கை கூறுகிறது.
கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை என்ற அளவில், ஐரோப்பா முதலிடம் வகித்தாலும், ஐரோப்பிய நாடுகளில் கத்தோலிக்கர்களின் வளர்ச்சி மிகக் குறைவாக உள்ளது என்று இப்புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
உலக அளவில், ஆப்ரிக்காவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது என்றும், அதற்கு அடுத்தபடியாக, ஆசிய நாடுகளில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும் இவ்விவரங்கள் கூறுகின்றன.
உலக மக்கள் தொகையில் 60 விழுக்காட்டை கொண்டுள்ள ஆசியாவில், 11 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள் என்றும், அமெரிக்கக் கண்டத்தில் திருமுழுக்கு பெற்ற கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 49 விழுக்காடு என்றும் இப்புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : Vatican Insider








All the contents on this site are copyrighted ©.