2014-05-23 17:22:30

மருத்துவர்கள் உதவியுடன் மரணம் என்ற முயற்சியை எதிர்த்து இலண்டன் நகரில் போராட்டங்கள்


மே,23,2014. இறக்க விரும்புவோருக்கு மருத்துவர்கள் உதவிகள் செய்யலாம் என்பதைச் சட்டமாக்கும் முயற்சியில் பிரித்தானிய அரசு கலந்துரையாடல் மேற்கொண்டிருப்பதை எதிர்த்து இப்புதனன்று இலண்டன் நகரில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Not Dead Yet UK (NDYUK), அதாவது, 'இன்னும் இறக்கவில்லை, ஆயினும் பிரித்தானிய குடிமக்கள்' என்ற பெயரில் இயங்கும் ஒரு சமுதாய அமைப்பு, மருத்துவர்கள் உதவியுடன் மரணம் என்ற முயற்சியை எதிர்த்து போராட்டங்கள் நிகழ்த்தியது.
மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை என்பதை, மருத்துவர்கள் உதவியுடன் மரணம் என்று மாற்றுவதால், இந்தச் சட்டத்தின் விபரீதத்தைக் குறைக்க முடியாது என்றும், இதனால், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள பெருமளவில் கட்டாயப்படுத்தபடுவர் என்றும் இவ்வமைப்பினர் கூறினர்.
மருத்துவர்கள் மத்தியில் இச்சட்டம் குறித்து எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், 77 விழுக்காட்டினர் இதனை எதிர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.