2014-05-23 17:18:47

செல்ல மிருகங்களைக் காட்டிலும் கருவில் வளரும் குழந்தைகளின் உயிர்கள் மதிப்பிற்குரியன - Chile நாட்டு கர்தினால் Ricardo Ezzati


மே,23,2014. வீட்டில் வளர்க்கப்படும் செல்ல மிருகங்களைக் காட்டிலும் கருவில் வளரும் குழந்தைகளின் உயிர்கள் மிகவும் மதிப்பிற்குரியன என்று தென் அமெரிக்க கர்தினால் ஒருவர் கூறினார்.
Chile நாட்டின் Santiago உயர்மறைமாவட்டத்தின் பேராயரான கர்தினால் Ricardo Ezzati அவர்கள், Chile அரசுத் தலைவர் Michelle Bachelet அவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையை எதிர்த்து தன் கருத்துக்களை வெளியிட்டார்.
அரசுத் தலைவர் Bachelet அவர்கள், Chile நாட்டில் கருக்கலைப்பை சட்டமாக்கும் முயற்சிகளைத் துவங்கவிருப்பதாகக் கூறியுள்ள அதேவேளையில், நாட்டில் செல்ல மிருகங்கள் இன்னும் தகுந்த வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விடுத்த அறிக்கையை கர்தினால் Ezzati அவர்கள் விமர்சனம் செய்தபோது இவ்வாறு கூறினார்.
உலகிலேயே, வாழ்வை ஆதரிக்கும் சட்டங்களை அதிகம் கொண்ட நாடென கருதப்படும் Chile நாட்டில், 1989ம் ஆண்டு முதல், கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிரானச் செயல் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போதைய அரசு, இச்சட்டத்தை நீக்கிவிட்டு, கருக்கலைப்பைச் சட்டமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.