2014-05-20 15:51:29

இஸ்ராயேல் பாலைவனத்தில் புகலிடம் தேடியுள்ள ஆப்ரிக்க அகதிகளை கத்தோலிக்க குழு சந்திப்பு


மே 20,2014. இஸ்ராயேலின் பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புக்காவல் மையத்தில் தங்கியிருக்கும் சூடான் மற்றும் எரிட்ரியா அகதிகளைச் சென்று பார்வையிட்டனர், எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் பிரதிநிதிகள்.
அருள்பணியாளர்கள் மற்றும் பெண்துறவிகள் என 13 பேரைக்கொண்ட இக்குழு, இஸ்ராயேலின் Negev முகாமில் புகலிடம் தேடித் தங்கியிருக்கும் 2300 பேரைச் சந்தித்ததோடு அவர்களின் பிரச்னைகள் குறித்தும் ஆராய்ந்தது.
நகரைவிட்டு தூரத்தில் பாலைவனத்திற்கு மத்தியில் சிறைக்கைதிகள்போல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இம்மக்களுக்கு போதிய உணவோ, கல்வி வசதிகளோ, நலத் திட்டங்களோ இல்லை என இந்தக் கிறிஸ்தவக்குழு கவலையை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.