2014-05-19 16:26:01

நிதி நிர்வாகத்தில் திருப்பீடம் கொணர்ந்த புதியச் சட்ட அமைப்பு முறை, உலகத் தரத்தைப் பின்பற்றுவதாக உள்ளது


மே,19,2014. 'வத்திக்கான் வங்கி' என்று பரவலாக அறியப்படும் IOR என்ற, மறைப்பணிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள நிதி நிறுவனத்தின் கடந்த ஆண்டு நடவடிக்கைகள், நிதித் தொடர்புடைய குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கானச் சட்டங்களை பலப்படுத்துபவைகளாக இருந்தன என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது, AIF எனப்படும் வத்திக்கான் நிதிக் கண்காணிப்புக் குழு.
நிதித் தொடர்புடையக் குற்றங்களைத் தடுப்பதற்கும், பயங்கரவாதக் குற்றங்களுக்கு, கறுப்புப்பணம் பயன்படுத்தப்படுவதை ஒழிக்கவும் சட்ட அமைப்பு முறையை உருவாக்கிய திருப்பீட நிதிக் கண்காணிப்புக் குழு, அதனை நன்முறையில் செயல்படுத்தியும் உள்ளதென்று தெரிவித்தார், AIF என்ற இக்குழுவின் தலைவர், Rene Brulhart.
2013ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய அவை கொணர்ந்த நிதி கண்காணிப்புச் சட்டதிட்டங்களுக்கு இயைந்த வகையில், திருப்பீடம் கொணர்ந்த புதியச் சட்ட அமைப்பு முறை, உலகத் தரத்தைப் பின்பற்றுவதாக உள்ளது என்றும் கூறினார், Brulhart.
வத்திக்கான் வங்கிக்குள் வரும் பணம், மற்றும், அங்கிருந்து வெளியே கொண்டுசெல்லப்படும் பணம் குறித்து பல கட்டுப்பாடுகள் புகுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன என்று Brulhart அவர்கள் மேலும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.