2014-05-17 16:59:33

அனைத்துலகக் குடும்ப நாள் கொண்டாட்டத்தையொட்டி, பேராயர் Paglia ஐ.நா. அவையில் உரை


மே,17,2014. குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குக் கல்வி வழங்குவதிலும், அவர்களை நல்ல குடிமக்களாக வளர்ப்பதிலும் குடும்பங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வு மதிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா. அவையில் உரையாற்றினார், திருப்பீட உயர் அதிகாரியான பேராயர் Vincenzo Paglia அவர்கள்.
அனைத்துலகக் குடும்ப நாள் கொண்டாட்டத்தையொட்டி, ஐ.நா. அவை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய, குடும்பப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Paglia அவர்கள், குடும்பத்தை மையமாகக் கொண்ட கொள்கைகளுக்கு உரமளிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே, சமுதாய வளர்ச்சியை உறுதி செய்யும் சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்று கூறினார்.
சமுதாய முன்னேற்றத்தை அடைவதற்கு, குடும்பங்கள் மதிக்கப்படுவது மிக அவசியம் என்பது மட்டுமல்ல, குடும்பங்களே சமூக முன்னேற்றத்தின் இதயம் என்பதும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று திருப்பீட அதிகாரி பேராயர் Paglia அவர்கள் தன் உரையில் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : ZENIT








All the contents on this site are copyrighted ©.