2014-05-15 15:48:46

கென்யா நாடு, வன்முறைப் பாலைநிலமாக மாறிவருகிறது - கர்தினால் John Njue


மே,15,2014. வன்முறைகள் நிறைந்த ஆப்ரிக்கக் கண்டம் என்ற பாலை நிலத்தில், அமைதி தரும் பூங்காவாக இதுவரை கருதப்பட்ட கென்யா நாடு, தற்போது வன்முறைப் பாலைநிலமாக மாறிவருகிறது என்று அந்நாட்டின் கர்தினால் ஒருவர் கவலையை வெளியிட்டுள்ளார்.
அண்மைக் காலங்களில் கென்யா நாடு சந்தித்துவரும் வன்முறைத் தாக்குதல்கள் குறித்து, நைரோபியின் பேராயரான கர்தினால் John Njue அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், தங்கள் நாடு வன்முறையாளர்களின் விளையாட்டுத் திடலாக மாறியுள்ளது என்று தன் வருத்தத்தை வெளியிட்டார்.
கென்யா ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் Njue அவர்கள், நாட்டின் அரசு தன் உளவுத் துறையின் சக்தியை அதிகரித்தால், இவ்வன்முறைகளின் வேர்களைக் கண்டு அவற்றை வேரோடு களைய முடியும் என்று கூறினார்.
நாட்டிற்குள் தற்போது ஊடுருவியுள்ள அழிவு ஆயுதங்களின் எண்ணிக்கை பெரும் கவலையை உருவாக்கியுள்ளது என்பதைக் கூறிய கர்தினால் Njue அவர்கள், ஆயுதங்களின் அதிகரிப்பிற்கும், அந்நாட்டில் அண்மையில் நடைபெற்றுள்ள கொலைகளுக்கும் உள்ள தொடர்பை எளிதில் காண முடிகிறது என்று கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.