2014-05-06 15:57:58

அரசுப் பொதுக்கூட்டங்கள் செபத்துடன் துவக்கப்படத் தடையில்லை - அமெரிக்க உயர் நீதிமன்றம்


அரசுப் பொதுக்கூட்டங்கள் செபத்துடன் துவக்கப்படத் தடையில்லை - அமெரிக்க உயர் நீதிமன்றம்

மே 06,2016. அரசு அதிகாரிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் செபத்துடன் துவக்கப்படுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், செபம் இடம்பெறலாம் என்ற சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டின் உச்ச நீதிமன்றம்.
நியூயார்க் பகுதியின் நகரசபைக் கூட்டம் செபத்துடன் துவங்குவது தடைச் செய்யப்பட வேண்டும் என 2007ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு, சிறு அமர்வு நீதிமன்றங்களைத் தாண்டி தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளதில், இத்திங்களன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், செபத்துடன் பொதுக்கூட்டங்களைத் துவக்குவது அரசியலைமைப்புக்கு எதிரானதல்ல எனத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுக் கூட்டங்களில், கிறிஸ்தவ மதத்தினர் மட்டுமல்ல எந்த மதத்தினரும் துவக்க செபத்தை நடத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: CNA








All the contents on this site are copyrighted ©.