2014-05-05 16:50:34

மனித மாண்பு எச்சூழலிலும் மதிக்கப்பட ஐ.நா.வில் திருப்பீடப் பிரதிநிதி அழைப்பு


மே 05,2014. சித்ரவதைகளுக்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தத்தை 2002ம் ஆண்டிலேயே ஏற்றுள்ள வத்திக்கான் நாடு, மனிதனின் மாண்பு எச்சூழலிலும் மதிக்கப்படவேண்டும் என்பதை எப்போதும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றது என்றார் பேராயர் சில்வானோ தொமாசி.
ஜெனிவாவின் ஐ.நா. அலுவலகத்தில் இடம்பெறும், சித்ரவதைகளுக்கு எதிரான கருத்தரங்கில் இத்திங்களன்று உரையாற்றிய திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் தொமாசி, சித்ரவதைகளும் வன்முறைகளும் எற்றுக்கொள்ளமுடியாதவை மற்றும் மனிதபிமானமற்றவை என்பதை எடுத்துரைத்து, உலகம் முழுவதும் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது திருப்பீடம் என்றார்.
திருஅவையின் கீழ் உள்ள அங்கத்தினர்கள் அனைவரும் அவரவர் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, துவக்க்க் காலத்திலிருந்தே திருஅவை சர்வதேச ஒப்பந்தங்களுக்கு இயைந்தவகையிலேயே சமூக நலனை மனதில்கொண்டு செயல்பட்டுவருகின்றது என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.