2014-05-05 16:51:29

உரோமில் வாழ்வுக்கு ஆதரவான மாபெரும் பேரணி


மே 05,2014. இத்தாலிய வாழ்வுரிமை இயக்கத்தால் இஞ்ஞாயிறன்று உரோம் நகரில் நடத்தப்பட்ட பேரணியில் உலகம் முழுவதும் இருந்து, பல்வேறு மதங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
'கருக்கலைத்தல் என்பது வன்முறை' என்ற அட்டைகளைத் தாங்கி, வாழ்வுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இந்த நான்காம் ஆண்டு பேரணி, மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவதாக இருந்தது என இதில் கலந்துக்கொண்டோர் தெரிவித்தனர்.
வாழ்வு என்பது நல்லது, அது மதிப்பிடமுடியாதது என்பதால் அதனை பாதுகாக்கவேண்டியது இன்றியமையாதது என்றார் இப்பேரணியில் கலந்துகொண்ட ரோசா என்ற பெண்மணி.
உலகில் உள்ள அனைத்து மக்களும் வாழ்வின் மதிப்பை உணர்ந்து, அதேவேளை அதனை பாதுகாக்க ஒன்றிணைந்து முன்வரவேண்டும் என்ற நம்பிக்கை, வாழ்வுக்கு ஆதரவான உரோம் நகர் பேரணியில் கலந்துகொண்டோரால் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.