2014-05-03 18:19:47

மெக்சிகோ ஆயர்கள் : சகோதரத்துவ ஒருமைப்பாட்டுணர்வுடனேயே சீர்திருத்தங்களை உண்மையாக்க முடியும்


மே 03,2014. எத்தனைச் சீர்திருத்தங்களை முன்வைத்தாலும், மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட மனசாட்சியும், சகோதரத்துவ ஒருமைப்பாட்டுணர்வும் உருவாக்கப்படவில்லையெனில் அந்த சீர்திருத்தங்கள் எப்பலனையும் கொணராது என உரைத்துள்ளனர் மெக்சிகோ நாட்டு ஆயர்கள்.
ஏறத்தாழ 5 கோடி மெக்சிகோ மக்கள் ஏழ்மையில் வாடுவதாக தங்கள் கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள், அண்மையில் அந்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் இந்த ஏழைமக்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீர்திருத்தங்கள் உண்மையான பலனைக் கொணர்வதற்கு, நல்ல மனச்சான்று உருவாக்கப்படுவதும், சகோதரத்துவ ஒருமைப்பாடு உணரப்படுவதும் இன்றியமையாதவை என்பதையும் வலியுறுத்தியுள்ளனர் மெக்சிகோ ஆயர்கள்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.