2014-05-02 16:15:27

நைஜரில் அரசியல்வாதிகளின் நேர்மையற்ற நிலைகளால் வன்முறைகள் பெருகுவதாக ஆயர்கள் கவலை


மே02,2014. நைஜர் நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் மோசடிகள், அந்நாட்டில் பயங்கரவாத மோதல்கள் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளன என அந்நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் பதவியிலிருப்போர் தங்கள் அதிகாரத்தை சுய இலாபங்களுக்காகப் பயன்படுத்துவதுடன், சட்டங்களையும் தங்களுக்கு இயைந்தாற்போல் வளைப்பதாகக் குற்றஞ்சாட்டிய நைஜர் ஆயர்கள், அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் மோசடிகளை கைவிடும்போதே பயங்கரவாத மோதல்கள் முடிவுக்குவரும் எனத் தெரிவித்தனர்.
உணவு நெருக்கடியை எதிர்நோக்கிவரும் ஏழை நாடான நைஜரில் தற்போது நைஜீரிய அகதிகளும் உள்புகுந்துள்ளதால் நிலைமை சீர்கேடடைந்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : FIDES








All the contents on this site are copyrighted ©.