2014-05-01 16:25:57

பாகிஸ்தானில் சமூகத்தொடர்பாளர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது


மே 01,2014. பாகிஸ்தான் நாட்டில் சமூகத்தொடர்பாளர்கள் அரசு புலனாய்வு பிரிவினராலும், அரசியல் கட்சிகளாலும், ஆயுதம் தாங்கிய குழுக்களாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவதாக Amnesty International எனும் மனித உரிமைகள் கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
2008ம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் சமூகத்தொடர்பாளர்கள், அதாவது பத்திரிகையாளர்கள் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உரைக்கும் Amnesty International, எண்ணற்றோர் அச்சுறுத்தப்பட்டும் கடத்தப்பட்டும் வந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
மனித உரிமை தொடர்புடைய விவகாரங்களில் பத்திரிகையாளர்கள் மௌனம் காக்கவேண்டும் என்பதையே அரசின் பல்வேறு தரப்புகளும் விரும்புகின்றன என்றார் அம்மனித உரிமைகள் அமைப்பின் அதிகாரி David Griffiths.
பத்திரிகையாளர்களுக்கு எதிராகப் பல்வேறு வன்முறைகள் இடம்பெற்ற போதிலும், பாகிஸ்தான் அரசு போதிய நடவடிடக்கை எடுக்கத் தயங்கியே வருகிறது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆதாரம் : Amn. Int








All the contents on this site are copyrighted ©.