சிரியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்து UNICEF கண்டனம்
மே 01,2014. சிரியாவில் அண்மையில் குழந்தைகள்மீது சில தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட
தாக்குதல்கள் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது UNICEF நிறுவனம். Al-Shaghour
எனுமிடத்தில் கடந்த செவ்வாயன்று தொழில் கல்விக்கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14
மாணவர்கள் இறந்துள்ளதையும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதையும் குறித்து கவலையை
வெளியிட்ட UNICEF எனும் ஐ.நா.வின் குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பு, அகதிகள் குடியிருப்பில்
நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று குழந்தைகள் இறந்துள்ளது குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளது. வாகனம்
ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, நெரிசல் மிகுந்த Homs நகர் சாலையில் வெடித்ததில்
100பேர் உயிரிழந்ததில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தன் வன்மையான கண்டனத்தை
வெளியிட்டுள்ளது UNICEF அமைப்பு.