2014-05-01 16:25:22

ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாகக் கவலை


மே 01,2014. ஒரிசாவில் 2008ம் ஆண்டின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், இன்னும் அமைதியில் வாழமுடியாமல், அடக்குமுறைகளையும் உரிமை மீறல்களையும் எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி திருஅவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான 2008ம் ஆண்டு படுகொலைகளிலிருந்து தப்பித்த ஒரு குடும்பத்தின் வீடு அண்மையில் எரிக்கப்பட்டதாகக் கூறினார், மனித உரிமை நடவடிக்கையாளரான கத்தோலிக்க அருட்பணியாளர் அஜய் குமார் சிங்
Budruka என்ற கிராமத்தில் Praful Digal என்ற கத்தோலிக்கர் அண்மையில் சீரமைத்த வீட்டை, இந்து தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக Sudershan Mallick, Pabitra Mallick, Mallick Nageswar என்ற மூவரை காவல் துறை கைது செய்தபோதிலும், தற்போது அவர்களை எவ்வித காரணமும் கூறாமல் விடுவித்துள்ளது.
ஒரிசாவின் கந்தமால் பகுதி படுகொலைகளுக்குப்பின், அப்பகுதியிலிருந்து கிறிஸ்தவர்களை வெளியேற்றுவதே சில குழுக்களின் நோக்கமாக இருந்து வருவதாக அப்பகுதியின் புனித பால் இளங்குருமட அதிபர் அருட்பணி Pradosh Kumar Nayak கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.