2014-04-30 16:55:43

தாய்லாந்து மதங்கள் ஒன்றிணைந்து அமைதிக்கான செபவழிபாடு


ஏப்.30,2014. தாய்லாந்தில் இடம்பெற்றுவரும் அரசியல் பதட்டநிலைகளைக் களையும் நோக்கில் நாட்டின் நான்கு முக்கிய மதங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கத்தோலிக்கர்களுடன் அமைதிக்கான செப வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
செபம் என்பது சக்தி நிறைந்தது அது ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன என்ற பாங்காக் பேராயர் Francis Xavier Kriengsak Kovithavanij, குரலற்றோரின் மௌன குரலுக்கு செவிமடுத்து இந்த மதத்தலைவர்கள் அமைதிக்கான செபத்தில் ஈடுபட்டதாக உரைத்தார்.
தாய்லாந்தின் புத்த, இஸ்லாம், இந்து மற்றும் சீக்கிய மதத்தலைவர்களுடன் இணைந்து கத்தோலிக்கர்கள் நிறைவேற்றிய இந்த செபவழிபாட்டில் அமைதிக்கான செபம் மூலம் ஐந்து மதங்கள் தங்கள் கைகளை இணைத்துள்ளன.
அனைவருக்கும் சரிநிகரான நீதி, சுரண்டலின்மை, வன்முறையற்ற நிலை போன்றவைகளை, பொதுநலனை மனதில்கொண்டு வளர்ச்சிக்காகச் செயல்படுத்துவதோடு, பிரச்னைகளுக்குத் தீர்வுக் காண பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என நாட்டின் தலைவர்களுக்கு ஏற்கனவே தாய்லாந்தின் கத்தோலிக்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.