2014-04-30 16:58:33

கொலம்பிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு திருத்தந்தை காட்டிவரும் ஆர்வம் குறித்து புரட்சிக்குழு மகிழ்ச்சி


ஏப்.30,2014. கொலம்பியாவில் அமைதிக்கென கியூப தலைநகரில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் ஆர்வம் காட்டி வருவதற்கு தன் நன்றியை வெளியிட்டுள்ளது கொலம்பியாவின் FARC என்ற புரட்சி குழு.
கொலம்பியாவிற்கான ஹவானா அமைதிப் பேச்சுவார்த்தைகள் நல்லதொரு முடிவைக் கொணரட்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளது, தங்களுக்கு ஊக்கம்தரும் வார்த்தைகளாக உள்ளது என FARC குழுவின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் கூறினார்.
இதற்கிடையே, கொலம்பிய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த வார இறுதியில் கொலம்பிய வெளியுறவு அமைச்சர் Maria Angela Holguin வத்திக்கான் வந்திருந்தபோது திருப்பீடச் செயலர் கர்தினால் Pietro Parolin கொலம்பிய அமைதிப்பேச்சுவார்த்தைகள் குறித்து ஆர்வமுடன் கேட்டுத்தெரிந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.