ஏப்.28,2014. நடக்கும் நிதியாண்டில் இந்தியாவில் தங்கம் கடத்தல் 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும்,
2012-13 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் அளவும் 5
மடங்கு அதிகரித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் கடத்தப்படும்
தங்கங்களின் அளவு 3000 கிலோவை எட்டும் என இந்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.